STRESS!!! நீங்க நல்லவரா? கெட்டவரா?
எக்ஸாம் நாட்களுகென்று ஒரு தனிக்குணம்உண்டு. காலை எழும்போதே பளிச்சென்று இருக்கும்.பல் துலக்கும் போது, குளிக்கும் போது, நடக்கும் போது, சாப்பிடும் போது என்று எந்த ஒருத்தருணத்திலும் வேறு சிந்தனைகளே ஓடாது. படித்ததை விட படிக்காததே எப்போதும் அதிகமிருக்கும். இதில் இருக்கிற டென்ஷன் பத்தாதென்று இது வரைக்கும் வெட்டு பழி குத்து பழியாயிருந்தவர்கள் கூட ,"மச்சி! இந்த topic படிச்சிட்டியாடா? ரொம்ப முக்கியமான topic டா. கண்டிப்பா கேள்வி வருது" என்று நாம் படிக்காத தலைப்பையே சொல்லுவார்கள். அதற்கு "படிச்சேன்டா" என்று நண்பன் பதில் தரும்போது ,"ராத்திரி முழுக்க நம்ம கூடத்தானேயிருந்தான்" என்று "கிரி" வடிவேலு கணக்காய் லுக் விட்டு கிளம்பினால் அப்போதுதான் வருஷம் முழுக்க கும்பிடாத பிள்ளையார் ஞாபகம் வருவார். கும்பிட்டு exam hallக்குள் போய் உட்கார்ந்தால் அடுத்த மூன்று மணி நேரம் போவதே தெரியாது. ஐந்து நிமிடமிருக்கும்போது அரக்க பரக்க பதிலை கிறுக்கி தாளை கட்டிக் கொடுத்துவிட்டு போய் சாப்பிட்டு படுத்தால் அப்போது வரும் தூக்கத்துக்கு ஈடு இந்த உலகில் கிடையாதென்று தோன்றும். யோசித்துப் பாருங்கள், இது போன்ற நாட்களில் நம்மை முழுவதும் துடிப்போடும் விழிப்போடும் வைத்திருப்பது எது? - எக்ஸாம் என்கிற stress தானே......! அப்போ stressனால ஒரு நல்லது நடந்தா, stress நல்லதுதானே....
இதற்கு பதில் சொல்லும்முன் பத்ரியின் கதையை பார்த்து விடுவோம். பத்ரி +2 பையன். பயங்கர படிப்பாளி. காலை 5மணிக்கு ஆரம்பித்தால் இரவு 10 மணி வரை ஸ்கூல், டியூஷன் என்று பரபரவென்று ஓடுபவன்.அனால் கடந்த ஒரு மாதமாக தாமதமாக எழுகிறான். ஸ்கூல் போகவே கஷ்டப்படுகிறான். tution எட்டிப்பார்ப்பதே இல்லை.வகுப்பில் எந்த ஒரு நடவடிக்கைகளிலும், அது படிப்பு சார்ந்ததாகயிருந்தால் ஈடுபட மறுக்கிறான். எல்லாவற்றையும்விட புத்தகத்தை தொடவே மறுக்கிறான். ஆனால் விளையாட்டு,கதைப்புத்தகம் என்றால் அதே ஆர்வத்துடன் இருக்கிறன். அவன் பெற்றோர் பயந்து போய்க் கூட்டி வந்தனர். அவனிடம் பேசிய போது ஒன்று விளங்கியது. அவன் அப்பாவுக்கு அவனை டாக்டராக்க ஆசை. அவனிடம் அடிக்கடி "+2 exam முக்கியம். அதுல கண்டிப்பாக பாஸ் பண்ணிடனும்" என்று சொல்லிக்கொண்டே யிருப்பார். நாள் முழுக்க இந்த exam பற்றியே பேச்சு. இடையில் ஒரு testல் மதிப்பெண் குறைந்ததிற்கு அவர் கண்டிக்க ஒருக்கட்டத்தில் exam பூதம் போன்று அவனுக்கு தெரிய ஆரம்பித்து விட்டது. exam எழுதினாலும் தோல்விதான் கிடைக்கும் என்று அவன் மனம் நினைக்க ஆரம்பித்துவிட்டது. அதுவே படிப்பென்றால் வெறுப்பாக, பதட்டம் தரும் ஒரு விஷயமாக மாறிவிட்டது. அவன் புத்தகத்தையே தூக்கிப்போட்டு விட்டான். இப்போது சொல்லுங்கள் - இப்படி ஒரு பையனின் படிப்பை எதிர்காலத்தை பாதிக்கிறதென்றால் எக்ஸாம் என்கிற stress கெட்டதுதானே?
நல்லவேளை!!! "தெரியலையேப்பா!" என்று சொல்லாமல் இந்தக் கேள்விக்கு விஞ்ஞானம் பதிலளிக்கிறது.
என் சென்றப் பதிவில், stress என்ற வார்த்தையை தந்த HANS SEYLE என்ற விஞ்ஞானியைப்பற்றி சொன்னேன். அதற்கு முன் சூழ்நிலைகளுக்கும் மனித மனத்திற்கும் இடையே இருக்கும் தொடர்பை பற்றி அதிகம் அறிந்திராத நம் விஞ்ஞானத்திற்கு ஒரு தெளிவான சாத்தியமான பதிலை தந்தார். அவரின் கருத்துப்படி எந்த ஒரு உயிரினமும் அதற்கு ஒரு பிரச்சினை என்று வரும் போது அதனை எதிர் கொள்ள தயாராகிறது. இந்த தயார் நிலை அதை அந்தப் பிரச்சினையை எதிர் கொள்ள உதவும். அதற்கான ரசாயனங்களை சுரக்கிறது. சக்தியை சேமிக்கிறது. விழிப்பாக்குகிறது. இது எல்லாம் அதன் செயல்பாட்டிற்கு உதவினாலும், சில காலம் வரை தான். அதன் பின் மெல்ல மெல்ல அந்த தயார்நிலையே அதற்கு எமனாகிறது. அதனால் செயல் பட முடியவில்லை. அதே போல்தான் மனிதன் பிரச்சினைகளை எதிர் கொள்வதும். exam என்ற stress அந்த எக்ஸாம் நாளன்று நம்மை முனைப்பாக்கி நம் செயல்பாட்டை அதிகரிக்கும்போது நல்லதாயிருக்கிறது. ஆனால் அதுவே தொடர்ந்து இருக்கும் போது நம்மால் தாங்கமுடியவில்லை.நம் performance படுத்து விடுகிறது. ஆகவே stress -நல்லதா? கெட்டதா? அளவான stress நல்லது. அதே அளவுக்கு மீறிச்செல்லும்போது நம்மை உடைப்பதால் கெட்டது.
stress என்றாலே கவலை, பதட்டம் தரும் விஷயங்களால் உருவாவதா? ஏன் சிலர் அதிகம் stress அனுபவிக்கிறார்கள்? சிலர் அனுபவிப்பதில்லை. அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.......
thirppi thiruppi varuvathaal resistance allathu accomadation enru sollalaamaa?
ReplyDelete