வணக்கம்...
பல சமயம் நமக்கு வரும் பிரச்சினைகளின் அடிப்படைகள் நமக்கு புரியாது. நம்மை நாமே நியாயப்படுத்திக்கொண்டு, நமக்கேதும் பிரச்சினையில்லை என்றும் சந்தர்ப்பம் சூழ்நிலை என்றும் நம்மையே ஏமாற்றிக்கொண்டிருப்போம். நம்முடைய இந்த சுய நியாயப்படுத்துதலை (Self Justification) தவிர்த்து, நம்முடைய நிஜமான தவறுகளை அடையாளம் கண்டு சொல்வதே நல்ல கவுன்சலர்களின் வேலை. இது எல்லோராலும் முடியாது. தவறான ஆலோசனைகளால் நேர விரயமும் மன குழப்பங்களும் தான் மிஞ்சும். ஆகவே உண்மையிலே நல்ல கவுன்சலர்களை அடையாளம் காண்பது என்பது சிகிச்சையின் அடிப்படை தேவைகளில் ஒன்று. கீழ்க்கண்ட விஷயங்களை ஒரு வழிகாட்டியாக கொள்ளலாம்...
சென்ற கவுன்சலிங் பதிவை தொடர்கிறேன்.சென்ற பதிவில் நல்ல கவுன்சலர்களை அடையாளம் காண்பது எப்படியென்று சொல்வதாக முடித்திருந்தேன்... அதே போல் நிஜமாகவே கவுன்சலிங் என்ன பயன் தரும் என்ற கேள்வியையும் இந்த வாரம் பார்ப்போம்...
பல சமயம் நமக்கு வரும் பிரச்சினைகளின் அடிப்படைகள் நமக்கு புரியாது. நம்மை நாமே நியாயப்படுத்திக்கொண்டு, நமக்கேதும் பிரச்சினையில்லை என்றும் சந்தர்ப்பம் சூழ்நிலை என்றும் நம்மையே ஏமாற்றிக்கொண்டிருப்போம். நம்முடைய இந்த சுய நியாயப்படுத்துதலை (Self Justification) தவிர்த்து, நம்முடைய நிஜமான தவறுகளை அடையாளம் கண்டு சொல்வதே நல்ல கவுன்சலர்களின் வேலை. இது எல்லோராலும் முடியாது. தவறான ஆலோசனைகளால் நேர விரயமும் மன குழப்பங்களும் தான் மிஞ்சும். ஆகவே உண்மையிலே நல்ல கவுன்சலர்களை அடையாளம் காண்பது என்பது சிகிச்சையின் அடிப்படை தேவைகளில் ஒன்று. கீழ்க்கண்ட விஷயங்களை ஒரு வழிகாட்டியாக கொள்ளலாம்...
1. உங்கள் பிரச்சனைகளை,உணர்வுகளை காது கொடுத்து கேட்கவேண்டும். இதற்கு Active Listening என்பார்கள்... அதாவது நீங்கள் உங்கள் பிரச்சினையை சொல்லி கொண்டிருக்க அவர் மதியம் சாப்பிட போகும் கோழி கறியை பற்றி யோசித்துக்கொண்டிருக்க கூடாது... உங்களை முழுமையாக உங்கள் மனதிலிருப்பதை பேச விட வேண்டும். எப்போடா gap கிடைக்கும் என்று காத்திருப்பது போல் இடையே பாயக்கூடாது... அவசியப்பட்டால் உங்கள் பிரச்சினைகளை அவர் புரிந்து கொண்டவற்றை உங்களிடம் சொல்ல வேண்டும்... உங்கள் பிரச்சினைகளை முழுமையாக அறியும் முன் நீ இப்படித்தான் இருப்பாய் என்று முடிவுக்கு வருவதோ உங்களை உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டி நீ செய்தது தவறு என்று பழிப்பதோ கூடாது. இரவினில் வரும் டிவி சேனல் லேகிய வைத்தியர்கள் இந்த ஜாதி...
2. ஒரு நல்ல கவுன்சலர் கண்டிப்பாக உங்களிடம் ஆலோசனையை தவிர மற்றவற்றை தர மாட்டார். என் புத்தகம் வாங்கு என் DVD வாங்கு உன் பிரச்சனை சரி ஆகிடும் என்று சொல்பவரை கண்டால் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்.....
3. ஒரு நல்ல கவுன்சலர் கண்டிப்பாக மன நல பிரச்சினைகளைப் பற்றிய அடிப்படை அறிவுடன் இருக்க வேண்டும். அவசியம் நேரிட்டால் உங்களை மன நல சிகிச்சைக்குப் பரிந்துரைக்க வேண்டும். As early as possible... மருந்து சாப்பிட்டால் நீ ஒழிஞ்ச!!!... என்று சொல்லி சரியான சிகிச்சை கிடைக்க தாமதிக்க கூடாது.
4. உங்கள் கேள்விகளுக்கு தெளிவான பதில் சொல்ல வேண்டும். உங்களை கேள்வி கேட்க ஊக்குவிக்க வேண்டும். நீ எப்படி என்கிட்டே கேள்வி கேக்கலாம் என்று கோபப்பட கூடாது.
5. உங்களைப்பற்றிய விவரங்களை உங்களிடம் கேட்காமல் வேறு யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள கூடாது.
6. நீங்கள் Second Opinion வாங்க விரும்பினால் கண்டிப்பாக மறுக்க கூடாது.
இவை எல்லாம் ஒரு நல்ல கவுன்சலரிடம் நீங்கள் எதிர்ப்பார்க்க கூடிய அடிப்படை விஷயங்கள். சரி நல்ல கவுன்சலர் கிடைத்து விட்டார் எல்லா பிரச்சினையும் தீர்ந்து விடுமா... என்றால் அது பிரச்சினையை பொறுத்து. அப்படியென்றால் எந்தெந்தப் பிரச்சினைக்கு கவுன்சலிங் தரலாம்...
கவுன்சலிங் - எதற்கு உதவும்...
மனதை பாதிக்கும் பிரச்சினைகள் எல்லாமே வியாதிகள் இல்லை. அவற்றுள் பல சாதாரண மனித வாழ்க்கை அனுபவங்கள். ஆனால் அதை எதிர் நோக்க முடியாதவர்களிடம் மனப்பாதிப்பை உண்டு செய்கின்றது. இது போன்ற உளவியல் பிரச்சனைகளுக்கு பல சமயங்களில் மன நல மருந்துகள் அவசியப்படாது. இவற்றுக்கு உளவியல் சிகிச்சை முறைகளே தேவைப்படும்.
உளவியல் சிகிச்சைகள் (Psychological Therapies அல்லது Psychotherapies) எனப்படுபவை வெவ்வேறு கோட்பாடுகளில் உருவானவை. இவற்றுக்கு ஒரு அடிப்படை கோட்பாடு இருக்கும்... இப்படித்தான் மேற்கொள்ள வேண்டும் என்ற வழிமுறைகள் இருக்கும்... நாம் பொதுவாக கவுன்சலிங் எடுத்துக்கோ என்று சொல்லும் போது இதுப்போன்ற உளவியல் சிகிச்சை முறைகளையே குறிப்பிடுகிறோம். கவுன்சலிங் என்பது ஒரு வகையான உளவியல் சிகிச்சை முறை மட்டுமே.
உண்மையில் கவுன்சலிங் என்பது ஒரு ஆலோசனை வழங்கலுக்கு மட்டுமே. இது உங்களுக்கு ஒரு முடிவெடுக்க உதவும். உங்கள் பிரச்சினைகளை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க உதவும். ஆனால் பிரச்சினையை தீர்க்குமா என்றால் தீர்க்காது. உதாரணமாக விபத்தில் கால் முறிந்தவர்களுக்கு மாவுக்கட்டு போட்டு ஒரு ஊன்றுகோலும் தருவார்கள். அவரின் கால் குணமடைய உதவுவது அந்த கட்டா... இல்லை அவரின் கையில் உள்ள ஊன்றுகோலா... கவுன்சலிங்கும் அப்படி ஒரு ஊன்றுகோல்தான்.
அந்தந்த பிரச்சினைகளை பொறுத்தே கவுன்சலிங் அமைய வேண்டும். அதை எல்லாவற்றையும் குணப்படுத்தும் சர்வரோக நிவாரணியாக கருதக்கூடாது. நான் ஏற்கனவே கூறியிருந்ததை போல் எவ்வாறு மன நல மருந்துகள் உளவியல் பிரச்சனைக்கு அவசியமில்லையோ அதே போல் உளவியல் வைத்தியங்களும் மனோவியாதிகளை முழுமையாக தீர்க்காது. ஏனென்றால் மன வியாதிகள் உருவாவது மூளையின் ரசாயனக் கோளாறுகளால். So எது மனோ வியாதி எது உளவியல் பிரச்சினை என்று எப்படி இனம் பிரிப்பது?... நல்ல கவுன்சலர்கள் தாராளமாய் இதை கண்டுப்பிடித்து விடுவார்கள். ஆனால் ஒரு வேளை இதை இனம் காண முடியாத அல்லது இனம் கண்டும் உங்களை தேவையான நல்ல சிகிச்சை பரிந்துரைக்க விரும்பாத போலிகளாய் இருந்தால் அங்கே கவுன்சலிங் உதவாது. அதற்காகத்தான் இந்த பதிவின் ஆரம்பத்தில் நல்ல கவுன்சலர்களின் தகுதிகளை குறிப்பிட்டிருந்தேன். When in doubt, உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு விட்டு அணுகுங்கள்.

இறுதியாக எந்த சிகிச்சை முறை என்றாலும் அதன் வெற்றியை தீர்மானிப்பது ஒன்றுதான் - COMMITMENT - குணப்படுத்த வேண்டும் என்று டாக்டருக்கும் குணமாக வேண்டுமென்று நோயாளிக்கும். தீர்வு என்னவென்று டாக்டர் சொன்னாலும் அதை பின்பற்ற போவது நோயாளிதான். ஆகவே இது போன்ற மனநல சிகிச்சை முறைகளில் பயன் பெறுபவரின் பங்களிப்பும் மிக மிக முக்கியம். நம் மக்களிடையே தென்படும் easy & quick fix மனப்பான்மை இதற்கு உதவாது. இதை புரிந்துக்கொண்டு உங்கள் மனநல மருத்துவரை அணுகுங்கள். சீக்கிரம் நலம் பெறுவீர்கள்.
அடுத்த வாரம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரையும் பாதிக்கும் ஒரு பிரச்சினையைப் பற்றி பார்ப்போம்.
நன்றி.
GOOD. I like it
ReplyDelete