Friday, August 24, 2012

முதல் பதிவு - மனம் திறக்கும் முன்...




வணக்கம்,

நான் ஆவுடையப்பன். மனநல மருத்துவன். இந்த வலைப்பதிவை நீங்கள் வாசிக்க துவங்குமுன் உங்கள் நேரத்தில் சற்றே எனக்கு தர வேண்டுகிறேன்.
மனம் திறந்து.... இந்த தளத்தின் அவசியம் என்ன... இன்று எல்லா பத்திரிக்கையிலும் சினிமாவிலும் மனநோய்கள் அதிகம் பேசப்படுக்கின்றன, சித்தரிக்கப்படுக்கின்றன. ஆனால் வெகு சிலரே அதை பற்றி முழுமையாக ஆராய்ந்து எழுதுகின்றனர்.(உ. ஒரு மனிதனின் கதையில் சிவசங்கரி, அந்நியனில் சுஜாதா). பல சமயம் வழங்கப்படும் செய்திகள் அரைக்குறையாகவும் சில சமயம் உளறல்களாகவும் உள்ளது நிதர்சன உண்மை. நம்பகமான செய்திகளுக்கென்று ஒரு தளம் உருவாக்கும் ஆசையின் விளைவே இந்த வலைப்பதிவுகள். இந்த பக்கங்களில் காணப்படும் விஷயம் அனைத்தும் 100% மருத்துவ ரீதியான உண்மைகள். இதில் காணப்படுவதில் உங்களுக்கு சந்தேகங்களோ கருத்து வேறுபாடுகளோ இருப்பின் தாராளமாக பகிர்ந்துக்கொள்ளுங்கள். பதிலளிக்கிறேன்.
அதேபோன்று மனநலம் பற்றிய செய்திகளில் முக்கால்வாசி Sex பற்றியே உள்ளன. மிக முக்கியமான பலரின் வாழ்வை பாதிக்கின்ற பல வியாதிகள் பற்றி யாருமே பேசுவதில்லை. நம்மில் பலர் இதுப்போன்ற விஷயங்களை படிப்பது சுவாரசியத்துக்காக என்று அதற்கொரு காரணமும் கற்பிக்கப்படுகிறது. நம்பினாலும் நம்பாவிட்டாலும் செக்ஸ்சை விட இந்த வியாதிகள் சுவாரசியமானவை , கொடூரமானவை. ஒரு மனிதன் தன் மனதை இழக்கும்போது தன் மனிதத்தன்மையே இழக்க நேரிடுகிறது. “பைத்தியம்” என்ற பட்டம் கட்டப்படுவதால் பந்தங்களை, பரிவை, நட்பை, மரியாதையை ஏன்... அடிப்படை மனிதயுரிமைகளை கூட இழக்கின்றான். ஆனால் இதில் வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றால் இதில் பல வியாதிகள் சரிவர மருந்து உட்கொண்டால் குணமாக கூடியவை – at the least தடுக்கப்பட கூடியவை. சரியான மருத்துவ விளக்கங்கள் தெரியாததாலும் புரியாததாலும் பலர் தேவை இல்லாத சிகிச்சைகளை மேற்கொண்டு அநாவசியமான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
ஆகவே நீங்கள் எதற்காக இந்த பக்கங்களை படித்தாலும் சரி, உங்களாலான உதவியாய் இதை பகிர்ந்துகொள்ளுங்கள்.(Share Button ஒவ்வொரு பதிவின் கீழும் இருக்கின்றது.) உங்கள் நேரத்துக்கு நன்றி. வாருங்கள்.

மனந்திறப்போம்.....

4 comments:

  1. உயர்திரு டாக்டர் ஆவுடையப்பன் அவர்களுக்கு ,
    உங்கள் முயற்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள்.வாரம் ஒரு முறை இது போன்ற நிகழ்ச்சிகளை webcast மூலம் மக்களை சென்றடையும் வகையில் இந்த வலைத்தளம் விரிவடைய வேண்டும் என்பது எங்கள் ஆசை.கேள்வ்களை கேட்பவர்களின் பெயர்கள் வெளிவராமல் செய்தால் "மனம் திறந்து" பாதிக்கப்பட்டவர்கள் பேச ஏதுவாக இருக்கும். தொடரட்டும் உங்கள் முயற்சி.

    அழகப்பன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி... கண்டிப்பாக செய்கிறேன்...

      Delete
  2. அருமையான முயற்சி

    ReplyDelete

உங்கள் கருத்துகளும் சந்தேகங்களும் வரவேற்கப்படுகின்றன ........